காதல் மீளமுடியா சிறை

ஏதொ...!! ஓர் சாலையிதான் .....
கண்டேன் உன்னை முதலில்...

யதார்த்தமாகத்தான் பார்த்து சென்றாய்.....
ஏனோ..!தெரியவில்லை
உன்னை பின் தொடர்ந்ததடி
என் மனம்.....

மறுநாள் நீயோ..!தூவி சென்றாயடி
புதிதாய் புன்னகையை....

பிழையறியா என் மனதில் .....
நிலையறியா ஆனந்தம்...

உன் கண்கள் எங்கும் வெட்கம்...
நானோ...!!பற்றினேன் உன் கரம்...

பொன்னிதழ் திறந்து உன்காதல் ...
நீ சொன்னாய்....

என்னுடம்பெங்கும் பாய்ந்த்தடி....
பலகோடி மின்சாரம்.....

உண்மை அன்பை ஊட்டினாய் -என்னுள்
உடல் கடந்த உறவோடு.....

எதிர்பார்ப்புகள் இன்றி எந்நாளும்
சேர்ந்து வாழ்வோம் ஒன்றாய்- என்றாய்...

இன்றோ....! வீட்டு சிறையில் -”நீ “
காதல் பிரிவில் - “நான் “

காதல் சுகமான வலி என்று சொன்னவன் யாரடி...
காதல் மீளமுடியா... சிறை.....

எழுதியவர் : ஸ்ரீராம் RAMNAD~ (9-Jan-14, 1:27 am)
பார்வை : 111

மேலே