எனக்கான உருவம்
என்னில் செழித்த
உணர்வுகளின்
விளிம்புகளை
நத்தையென உட்சுருக்கி
நகர்கிறேன் மௌனமாக.
எனக்கான வார்ப்பில்
ஏதோ ஒன்றாக
உனக்கு மட்டும் பிடித்தது போல
உருமாற்றம்
என்னையும் அறியாமலேயே.
உயரங்களைத் தீண்டும்
ஆவேசம் ஒரு நாள்
என்னை உந்தித்தள்ள
முற்றும் நான் நானாக
மாறிய அந்த நொடிகளில்
வெடித்துச் சிதறுகிறது
நீ எனக்காக
சமைத்த வார்ப்பச்சுகள்
உறைபனித் துகள்களென.
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
