நானும் ஒரு கவிஞன் தான்

நானும் ஒரு கவிஞன் தான் என் விழிகள்
உன்னைக் கண்ட பின்பு
ரசிக்காத என்னைக் கூட ஒரு நிமிடம் ரசிக்கின்றேன்
நீ என்னைப் பார்த்து புன்னகைத்த பின்பு
காற்றாடி போல் சுற்றித் திரிந்தேன்
உன் நினைவுகள் என் மனதில் பூத்த பின்பு
ஆயினும்...
இன்று கல்லறையில் தொலைந்த பின்போ
அறிந்து கொண்டேன்
நீ புன்னகைத்தது என்னை பார்த்து அல்ல என்று.