வாழ்க்கை

சிந்தனை சிறப்பு நீயும்
சிந்திக்காவிட்டால் என்ன பிறப்பு ?

நாய் நரி குணம் எதற்கு
நல்ல மனிதனாய் வாழ பழகு !

ஊர்பகையை வளர்த்து நீயும்
உடம்பை வளர்க்க நினைக்காதே !

பொன்னும் மணியும் எதற்கு
பெண்ணினம் மதிக்கா உனக்கு ?

தாய்மை என்பது சக்தி ! அதை
வாய்மையால் அறிவது முக்தி !

நல்லோர் உறவை நாடு ! அதுவே
எல்லோர் உறவிலும் கூட்டுறவு !

நீயும் நானும் ஓன்று என்று
அறியும் வாழ்வு நன்று !

அன்பாய் இருப்பது அறமே !
அறிந்தால் உலகம் அழகே !

கற்ற கல்வியே சிறப்பு ! அதை
கற்று கொடுக்கவும் பழகு !


சரோ

எழுதியவர் : சரோ (9-Jan-14, 2:05 pm)
Tanglish : vaazhkai
பார்வை : 287

மேலே