கரிசல் மண்ணில் ஒரு காவியம்4
கரிசல் மண்ணில் ஒரு காவியம்.
அத்தியாயம் 4
காதல் அறியாத வயது.ஆனால் அவள் மீது எனக்கொரு ஈர்ப்பு.அதை குழந்தைத்தனமான அறிவற்ற மோகனம் என்றுகூடச்சொல்லலாம்.என் சோட்டுப் பசங்களிடம் நான் கொண்டிராத ஒரு தனிப்பற்று அவளிடம் நான் பழகினேன் என்பது மட்டும் என் நினைவில் இருக்கிறது.பால் வேற்றுமை எங்களுக்குள் பழக்கத்தில் இல்லை .ஆனால் உணர்வில் ஒளிந்திருந்ததோ என்னவோ தெரியவில்லை.அப்பருவத்தில் அது தன்னை அடையாளம் காட்டிக்கொள்ளவில்லை.காலப்போக்கில் அறிவும் அனுபவமும் வளர வளர அதுவே எங்களுக்குள் இயல்பாகவே காதலாக துளிர்விட ஆரம்பித்தது.
பிஞ்சாக இருக்கும்போது தொடங்கிய அந்த நட்பு.பருவம் வளர வளர பால் வேற்றுமை புரியத் தொடங்கியது. குழந்தைத் தனத்தில் இயல்பாகத் தோன்றிய அந்த ஈர்ப்பு பால்வேற்றுமை புரியும்போது காதலாகக் கனிந்தது.குழந்தைகளாக பழகியபோது அஞ்சாமல் ஆடிய ஆட்டமும் பாட்டமும் வாலிபமாக பருவம் விளைந்து முற்றியபோது அஞ்சி ஒளிந்து கொள்ள முயன்றது.அந்த அச்சம்தான் நட்பைக் காதலாக மலரத் தூண்டியது.
பொதுவாக ஒன்றின் ஓட்டம் இயல்பபாக தன்போக்கில் தொடரும்போது அதன் திசையும் விசையும் மாறுவதில்லை.அது தடைகளை சந்திக்கும் போதுதான் அது வினை மாற்றம் அடைகின்றது.அதன் வலிமையும் கூடுகின்றது.அவ்வாறுதான் ஆண் பெண் இருபாலருக்கும் இடையே ஏற்படும் நட்பும் அது தன் நடப்பில் நட்பாக தொடரும் வரை சலனமின்றித்தான் போய்க்கொண்டிருக்கும்.அதற்கு தடைகளும் கட்டுப்பாடுகளும் ஏற்படும் போதுதான் அது தன் நட்பு எனும் காய் நிலையிலிருந்து காதல் எனும் கனி நிலைக்கு உயரத்.துடிக்கிறது.எவ்வாறு ஒரு கூட்டுப்புழு தன் கூட்டுக்குள்ளே வளர்ந்து முற்றியபோது கூட்டைக் கிழித்துக்கொண்டு அழகிய வண்ணங்களையுடைய சிங்காரச்சிறகுகளால் வண்ணத்துப்பூச்சியாக பறக்க முயல்கிறதோ அதுபோலத்தான் காதலும் தன் தடைகளைத்தாண்டி வெளிப்படுகிறது.
கமலாவின் பருவத்தோடு காவலும் வளர்ந்தது.காவலின் பலம் அதிகமாக அதிகமாக எங்களின் காதலும் வலிமை கூடி காவலையும் மீறத் துடித்தது.ஆச்சி எங்களை கவனிக்கும் வேலையையே பிரதானமாகக் கொண்டிருந்தாள்.என் நிழல் கூட அவள் வீட்டு முற்றத்தில் விழக்கூடாது என்பதில் கவனமாக இருந்து காவல் காத்து வந்தாள்.பொல்லாத ஆச்சி அவள் பகல் பொழுதெல்லாம் வீட்டு வாசல்படியில்தான் உக்காந்துகிட்டு பக்கத்து வீட்டுக்கிழவியையும் பேச்சுத்துணைக்கு கூட்டி வைத்துக்கொண்டு வெற்றிலையை சவைதுத்க்கொண்டு பேசிக்கொண்டே இருப்பாள்.நான் ஏதாவது சாக்குச்சொல்லி வீட்டுக்குள் நுழையலாம் என்று முயற்ச்சிப்பேன்.ஆனால் ஆச்சியின் அந்த பலமான காவலைத் தாண்டி என்னால் நுழைய முடியாதபடி வாசலை முழுமையாக அடைத்துக்கொள்வாள்.
ஆச்சி வருடம் தவறாமல் ஏகாதேசிக்கு விழித்திருப்பது வழக்கம்.என்னைத்தான் மகா பாரதம் வாசிக்கக் கூப்பிடுவாள்.இந்த வருடம் என்னைக்கூப்பிடவில்லை.நானும் இந்த சந்தர்ப்பத்தைப் பயன் படுத்திக்கொள்ள மறக்கவில்லை.வழக்கம்போல் ஆச்சி வாசலில்தான் உக்காந்திருந்தாள்.நானும் அலையாத விருந்தாளியைப்போல் வலியக்கட்டி போய் நின்னேன் .என்னை உக்காருன்னு சொல்லல.சொல்லாட்டி என்ன நானே சப்புன்னு உக்காந்து
“என்ன ஆச்சி இன்னிக்கு ஏகாதேசி.மகாபாரதம் படிக்கலாமா?எப்போ ஆரம்பிக்கலாம்?நாங் குளிச்சிக்கிளிச்சி ரெடியா வந்துட்டேங்.”ன்னு சொல்லி நானும் வாசல் படியில உக்காந்துகிட்டு ஆச்சியோட பேச ஆர்ம்பிச்சுட்டேன்.
ஆச்சி விடுவாளா என்ன!”இல்ல இன்னிக்கு கமலாவே படிப்பா”
ஆச்சி இன்னிக்கு எனக்கு கத படிக்கத் தோதில்ல.அவனே படிக்கட்டும்”
உள்ளே இருந்து கமலாவின் குரல்.
“என்ன ஆச்சி வருசமெல்லாம் நாந்தான படிக்கிறேன்.பாவம் கமலா அது என்னக்கிப் படிச்சிச்சி.இதோ புஸ்தகம் கொண்டுட்டே வந்துட்டேங் ஆச்சி “ன்னு சொல்லிக்கிட்டே கதய படிக்க ஆரம்பிச்சிட்டேங்.
கொ.பெ.பி.அய்யா.

