22இளமை ரகசியம்
நீங்கள் வயதான தோற்றத்தை அடையாமல் என்றும் இளமையுடன் இருக்க, கொலாஜன் ஃபேஷியல் பயனுள்ளதாக இருக்கும்.
கொலாஜன் ஃபேஷியல்:
நமது சருமம் கொலாஜன் (Collagen) என்ற புரோட்டீன் ஃபைபர்ஸ்-ஆல் ஆனது. வயதாகும் பொழுது நீர், கொழுப்புச்சத்து உடலில் இல்லாததால் இந்த கொலாஜன் சுருங்கும். வயது முதிரும் போது இந்தச் சுருக்கம் அதிகரிக்கும். இந்தச் சமயத்தில் உள்ளே சாப்பிடுவதற்கும் நல்ல சத்துணவு வேண்டும். அத்துடன் முகத்தில் பூசுவதற்குக்கூட கொலாஜன் தேவையாக இருக்கிறது. இது கடைகளில் கொலாஜன் என்றே கிடைக்கிறது. ஜெல் டைப்பில் கிடைக்கும் கொலாஜனை முப்பது வயதிற்கு மேற்பட்டவர்கள் உபயோகிக்கலாம். வயதானவர்கள் அனைவருமே கொலாஜனை வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்றுமுறை தடவி சிறிது நேரம் கழித்து முகம் கழுவினால் முகச்சுருக்கம் போய் இளமை திரும்புவது நிச்சயம்.
கொலாஜன் மாஸ்க் என்றுகூடக் கடைகளில் கிடைக்கிறது. அதை அப்படியே முகத்தில் போட்டு அரைமணி நேரம் ஊறவைத்துக் கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
மேலும் உண்மையான ஆரஞ்சை வட்டவடிவத்தில் 'கட்' செய்த தோற்றத்துடன், ஆரஞ்சு ப்ளேவருடன் கூடிய கொலாஜன் மாஸ்க்கும் வந்திருக்கிறது. இதை முகத்தில் போடும்பொழுது 'ப்ரெஷ்ஷான லுக்' கிடைக்கும். இதை ஒரு பாக்கெட் வாங்கி ஃபிரிட்ஜில் வைத்துக் கொண்டால், தேவைப்படும்போது உபயோகிக்கலாம்.
தற்பொழுது heat mask-ம் புதிதாக வந்திருக்கிறது. இது வயதானவர்களுக்கு மிகவும் உகந்தது. கொலாஜன் ஃபேஷியலுக்கு முன் இந்த ஹீட் மாஸ்க்கைப் போடலாம். இது சின்னச் சின்ன ட்யூப் வடிவத்தில் பாக்கெட்டுகளில் கிடைக்கிறது. இதை ஒரு நிமிடம் மசாஜ் செய்தாற்போல் தடவி ஒரு நிமிடம் விட்டுவிட வேண்டும். இது லேசான சூடாக இருக்கும். ஆனால் உடனடி எஃபக்ட் கிடைக்கும். இது துவாரங்களின் உள்ளே போய் அழுக்கு வெளியே வந்துவிடும். தோல் நல்ல பளிச்சென்று இருப்பதை நீங்களே கண்கூடாக பார்ப்பீர்கள். சில நிமிடங்களிலேயே ஃபேஷியல் செய்த பலன் கிடைத்துவிடும்.
கொலாஜன் ஃபேஷியல் தசையை இறுகச் செய்து தோலுக்கு ஊட்டச்சத்தைக் கொடுக்கக் கூடியது. முக்கியமாக குறிப்பிட வேண்டுமென்றால் இந்த முறையைக் கடைப்பிடித்தால் சீக்கிரமே வயதான தோற்றத்தை அடையாமல் தடுக்கப்படுவீர்கள். அப்புறம் உங்களைப் பார்த்து நாலு பேராவது, 'எக்ஸ்க்யூஸ் மீ! எந்தக் காலேஜில் படிக்கிறீங்க?' என்று கேட்கப் போகிறார்கள்!
ஆஹா ஃபேஷியல்:
ஒரு சிலருக்குத் தாங்கள் கறுப்பாக இருக்கிறோம் என்ற தாழ்வு மனப்பான்மை எப்போதும் உண்டு. இந்தத் தாழ்வு மனப்பான்மையினாலேயே வேறு எதிலும் முழுக்கவனம் செலுத்தி வெற்றிபெற முடியாமலும் போகிறார்கள். இறைவன் படைப்பில் அனைவருமே அழகுதான். ஒவ்வொருவரிடமும் அழகு ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை வெளியே கொணர்வதில்தான் உங்கள் கைவண்ணம் இருக்கிறது. பொதுவாகவே நிறம் அதிகமாக வேண்டும் என்ற நினைப்பில் உள்ளவர்கள் முதலில் கெமிக்கல் கலந்த சோப், க்ரீம்களை விட்டுவிட வேண்டும். சாதாரணமாக நிறத்தை மேம்படுத்த நீங்கள் உபயோகிக்கும் ஃபேர்னஸ் க்ரீமில் கூட கெமிக்கல்ஸ் உண்டு. இதை அடிக்கடி உபயோகிக்கும்பொழுது தோல் வறண்டு, உலர்ந்துவிடும். இதைத் தவிர்க்க ஊட்டச்சத்துகள் அடங்கிய க்ரீம் உபயோகிக்கலாம். முத்திலிருந்து எடுக்கப்பட்ட க்ரீம் அல்லது வைட்டமின் 'ஈ' கலந்த க்ரீம் உபயோகிக்கலாம்.
இதைத் தவிர, அழகு நிலையங்களில் மூலிகைகளைக் கொண்டு நிறத்தை இம்ப்ரூவ் செய்வதற்காக மூலிகை ஃபேஷியல் செய்யப்படுகிறது. இதை நாங்கள் எங்கள் பாஷையில் 'ஆஹா... ஃபேஷியல், என்கிறோம். பழச்சாறு... உலர் பழங்கள், ஆல்ஃபா ஹைட்ராக்ஸி ஆசிட் இந்த மூன்றும் சேர்ந்தது தான் இந்த 'ஆஹா... பேஷியல். இதைச் செய்யும்போது இரட்டிப்புப் பலன் கிடைக்கும். மேல்தோலை எடுத்து புதிதான தோல் உருவாகும். தோலுக்கு அதிக ஊட்டச்சத்து கொடுக்கக்கூடியது.