புதுமைப் பொங்கலிடு

ராகங்கள் பாடாத வீதியில்
மௌனமே குடியிருக்கும்
கவிதைகள் இல்லாத நெஞ்சினில்
வெறுமையே சூழ்ந்திருக்கும்
கடவுளைக் கையெடுத்துக் கும்பிடாத
இதயத்தில் காரிருளே சூழ்ந்திருக்கும்
காதல் இல்லாத வாழ்வினில்
கானலே பாய் விரித்திருக்கும்
ஆழம் இல்லாத காதலில்
உறவுகள் போலி வேடமிட்டுத் திரியும்
உண்மை அன்பில்லாத நட்பில்
பரிசுகள் கைகொட்டிச் சிரிக்கும்

பிரக்ஞை இல்லாத சன நாயகத்தில்
போலி நாடகம் தினம் அரங்கேறும்
வினோதமான அடிமைத்தனம் விசித்திரமான
தொடர்கதை எழுதும் நாளும்
முக்காடிட்ட அறுதப் பழமைகள்
புதுமைகள் போல் பாவனை செய்யும்
உறுதியில்லா வாக்குறுதிகள் வீதியில் ஓலமிடும்
துட்டினை வாசலில் விட்டெறிந்துவிட்டு செல்லும்
ஏழை சனம் பாவம் என்ன செய்யும்
வரிசையில் நின்று நன்றியுடன் வாக்களிக்கும்
நாற்காலி நாயகர்கள் ஆட்சி பிடித்து கொண்டாடும்
ஐந்து ஆண்டும் கடந்து போகும்

பழமைப் பழக்க வழக்கங்களை
முறித்து அடுப்பில் செருகி
புதுமைப் பொங்கலிடப் புறப்பட்டு வா
புதுமைப் பெண்ணே
புதுப் பொங்கலிடப் புறப்பட்டு வா !

~~~கல்பனா பாரதி~~~

எழுதியவர் : கல்பனா பாரதி (10-Jan-14, 4:10 pm)
பார்வை : 126

மேலே