தம்பிக்கு

பொது வாழ்க்கை என்ற வந்த போது தம்பி
சிறப்பும் கவனமும் கருத்தில் கொண்டு
நாணயத்தை கண் போல கருதி
அடக்கத்தைக் கையாண்டு
அமைதி காத்து சாந்தமாக
அனுசரித்து வாழக் கற்றுக் கொள்
கணக்கில் தப்பிதம் இல்லாமல்
பேச்சில் கோபம் இல்லாமல்
நேர்மை தவறாமல்
நிதானம் பிசகாமால்
நேரம் பாராமல்
தொலை நோக்கு பார்வையோடு
உடன் பணியாற்றுபவர்களை
வஞ்சிக்காமல் ஒழுக்கத்தோடு
நடந்து கொள் தம்பி.
இதுவே ஒரு கோட்பாடு
நினைத்து செயல்படு.

எழுதியவர் : மீனா சோமசுந்தரம் (10-Jan-14, 1:17 pm)
சேர்த்தது : Meena Somasundaram
Tanglish : thambikku
பார்வை : 398

மேலே