பழனி

“முத்தையா கல்வி அறக்கட்டளை...அரசின் உதவியுடன் பள்ளி செல்லா குழந்தைகளுக்காக இயங்கியது அந்த பள்ளி....அழகிய அந்த கிராமத்தில் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக காட்சி அளித்தது.... வேந்தன் தன் தந்தையின் பெயரில் தன் மனைவியுடன் சேர்ந்து சேவையாக செய்து வந்தான் அந்த கல்வி அறக்கட்டளையை“....
“இறை வழிபாடு கூட்டம் முடிந்து மாணவர்கள் வகுப்பிற்கு சென்றனர்...முதல் வகுப்பு எப்பொழுதும் எல்லா மாணவர்களையும் ஒன்றாக உட்கார வைத்து வாழ்க்கை திறன் பயிற்சி அளிப்பது வழக்கம்...
செந்தமிழ் டீச்சர் ஆரம்பித்தார்....மாணவர்களே! இன்று உங்களுக்கு எதிர்கால லட்சியம். ஆசை இதெல்லாம் என்னனு சொல்விங்கலாம் நம்ம வேந்தன் சார் உங்களுக்கு ஆசை நிறைவேற நீங்க என்ன படிக்கனும். நீங்க உயர்ந்த இடத்துக்கு போக எப்படி முயற்சி பண்ணனும்னு சொல்வாங்கலாம் சரியா என்றார் கொஞ்சும் குரலில்’’.....
‘’மாணவர்கள் ஆமோதித்த குரலில் சரிங்க டீச்சர் என்றனர்’’....
‘’சுரேஷ் ஆரம்பித்தான், டீச்சர் எனக்கு எங்க ஊரு செட்டியார் கடை மாதிரி பெரிய கடை வைக்கனும் டீச்சர் அம்மாடீ எத்தே பெருசு கடை தெரியுமா டீச்சர் என்றான் மழலை குரலில்’’....
‘’மாணவர்களிடமிருந்து சிரிப்பு சத்தம்...மேஜையை தட்டி சலசலப்பை நிறுத்திய வேந்தன் அவன் சொல்வதில் என்ன தவறு...ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது...தனக்கென்று சுய தொழில் செய்வதில் தவறு இல்லை.’’...
‘’சுரேஷ் நீ செந்தமிழ் டீச்சர் கிட்ட கணக்கு போட நல்லா கத்துக்க என்னை போல பெரியவனா வளர்ந்ததுக்கு அப்புறம் நீ பெரிய கடை வைக்கலாம் புரியுதா என ஆதரவாக பேசினார்’’..
‘’அடுத்ததாக ஐந்தாவது படிக்கும் பழனி. சார் நான் போலீஸ் ஆக போரேன் என்றான்’’...
‘’அப்படியா இங்க வா என ஆதரவாக அழைத்த செந்தமிழ் ஏன் உனக்கு இந்த ஆசை என கேட்க....ஆமாம் டீச்சர் முதல்ல குடிக்கிறாங்கல்ல அவங்கல எல்லாம் புடிச்சி உள்ள போடுவேன்...அப்புறம் என் ரெண்டு தங்கச்சிக்கும் நான் தான் கல்யாணம் பண்ணி வைக்கனுமாம் டீச்சர் எங்க அம்மா சொன்னாங்க. அதுக்கு காசு நிறையா சேர்ப்பேன்...அப்புறம் எங்க அம்மாக்கு புடவை எடுத்து குடுப்பேன் என ஒரு பெரிய லிஸ்டயே அடுக்கினான் பழனி’’....
‘’குடிகார அப்பாவால் தினமும் இன்னல்பட்டு பள்ளி செல்லாமல் குழந்தை தொழிலாளியாக வேதனைபட்டு இருந்தாலும் தாயின் புத்திமதியால் தான் எத்தனை பொறுப்பாக யோசிக்கிறது இந்த குழந்தை... இவனை இங்கு கொண்டு வர எத்தனை போராட்டம்.’’...
‘’குடும்பத்தை பிரிந்து ஏங்கும் பழனியை திடீரென்று சோகம் ஒட்டி கொள்ள நிலைமையை உணர்ந்த வேந்தன், மாணவர்களே பழனி பொறுப்புள்ள நல்ல காவல்துறை அதிகாரியா வரனும்னு நாம வாழ்த்தி கை தட்டுவோமா என கேட்க மாணவர்கள் அணைவரும் ஆர்பரித்து கை தட்ட பழனிக்கு இப்போதே போலிஸ் ஆகிவிட்டது போல ஓரு பிரம்மிப்பு.’’..
வேந்தனுக்கும். செந்தமிழிற்கும் எப்போதுமே பழனியின் தாய் மீது தனி மரியாதை உண்டு....உங்கள் குழந்தையை நன்றாக படிக்க வைக்கிறோம்...இலவசமாக அனைத்தையும் தருகிறோம்...எங்களோடு அனுப்புங்கள் என கேட்டபோது,
“செங்கல் சூலையில் வேலை செய்து கையில் காப்பு காய்ச்சி படுத்து இருந்த பழனியை தூக்கி கொடுத்து அந்த மனுசன் வரதுகுள்ள எம்புள்ளய கூட்டிட்டு போய்டுங்க தம்பி என அழுத உத்தமி இல்லவா அவள்”.....
“அதன் பிறகு பழனியின் தாய் அங்கு வந்ததே இல்லை....வந்தால் எங்கு தன் கணவனுக்கு தெரிந்து விட போகிறது என்று பயமே அதற்கு காரணம்...மற்ற பிள்ளைகளை பார்க்க பெற்றோர்கள் வரும்போது பழனியை சோகம் தொற்றி கொள்ளாமல் இருப்பதில் வேந்தனும், செந்தமிழும் மிகவும் கவனமாக இருந்தனர்“....
“குழந்தை இல்லாத அவர்களுக்கு பழனியின் மழலை குரல் தான் இரண்டு வருடமாக ஆறுதலாக இருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.“...
“திடீரென வெளியில் யாரோ கூச்சலிடும் சத்தம்....எம்புள்ளைய என்னோட அனுப்புங்க நான் கூட்டிட்டு போகனும் உள்ள யாரு என சத்தம் கேட்டு வெளியில் வந்த வேந்தனுக்கோ அதிர்ச்சி...அங்கு கூச்சலிட்டு கொண்டு இருந்தது பழனியின் தாய் தான்“...
“வெளியில் வந்த வேந்தனையும் மதிக்கவில்லை அவள்...இங்க பாரு தம்பி என் புள்ளைய என் கூட அனுப்பு என்க... வேந்தனோ இப்போது எல்லாம் அனுப்ப முடியாது பழனி நன்கு படிக்கும் மாணவன் அவனுக்கு அடுத்த வாரம் பரிட்சை இருக்கு, அதை அவன் எழுதினால் இங்கு இருக்கும் அரசு பள்ளியிலேயே அவனை சேர்த்து கொள்வார்கள் என முடிவாக கூறினான்“...
“இங்கபாருய்யா என் புள்ளைய அனுப்ப முடியாதுனு சொல்ல நீ யாரு என கத்தி கொண்டு இருக்கும் போதே பயத்தடன் வெளியில் வந்தான் பழனி“....
“வாடா என் கண்ணு அடுத்த வாரம் நம்ப முதலாளி நம்ப எல்லாரையும் வெளியூருக்கு கூட்டிட்டு போயி நிரந்தரமா தங்க வச்சி நல்ல சம்பளம் தரதா சொல்லி இருக்காரு நீயும் வந்தா நல்லா சம்பாதிக்கலாம் என தல்லாடிக் கொண்டே கையை பிடித்து இழுத்தான் பழனியின் தந்தை“....
“நான் வரமாட்டேன் நான் இங்க தான் இருப்பேன் என பயத்தில் கத்திய பழனியின் வார்த்தையை கொஞ்சமும் காதில் வாங்காதவாள்,என் புள்ளைய பெத்தவங்கள பாத்தே பயப்புடுற மாதிரி இப்படி மாத்தி வைச்சி இருக்கீங்களே என பொரிந்து தள்ளி விட்டு கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து பேருந்து நிலையத்தை ஓட்டமும் நடையுமாக பழனியை இழுத்து கொண்டு ஓடியே விட்டாள் பழனியின் தாய்.....தள்ளாடி கொண்டே பின்னாடியே சென்றான் அவளது கணவன்“...
“வேந்தனுக்கும், செந்தமிழிற்கும் ஒன்றுமே புரியவில்லை என்ன ஆயிற்று இந்த பெண்ணிற்கு, இவள் தானே நம்மோடு அனுப்பினாள்....இப்போது இப்படி நடந்து கொள்கிறாளே என பிரம்மித்து நின்றனர்...பழனியின் அழுகுரல் அவர்களின் மனதினை விட்டு செல்ல மிகுந்த நேரம் பிடித்தது“....
“நடுஇரவு கிராமமே அமைதியாக காட்சி அளித்தது... வேந்தனுக்கும், செந்தமிழிற்கும் பழனியின் நியாபகத்தில் தூக்கமே வரவில்லை....அய்யா,அய்யா என மெதுவாக யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்டு இருவருமே எழுந்து வெளியில் வர அவர்களுக்கு அதிர்ச்சி....பழனியை தோளில் போட்டவாறு நின்று கண்டு இருந்தாள் அவனது தாய்“...
“தம்பி மொதல்ல நான் பேசுனதுக்கு எல்லாம் மன்னிச்சு இடுங்க...என் புருஷன் ஒரு குடிகாரன் அது உங்களுக்கே தெரியும்...அந்த ஆளு என்னையும் என் புள்ளைங்களையும் காலம்பூரா வேலை செய்யுற மாதிரி எங்க முதலாளி கிட்ட கையெழுத்து போட்டு குடுத்துட்டாரு..என் உறவுகாரவங்க மூலமா எப்படியோ பழனி இங்க இருக்கரத தெரிஞ்சிகிட்டு என்ன அடிச்சி பழனிய கூட்டிட்டு வர தொல்ல பண்ணுனாரு....நான் வந்து அப்படி பேசுலனா அவரு முதலாளி ஆளுங்கல கூட்டிட்டு வந்து பழனிய எனக்கு தெரியாம பழனிய எங்கயாவது கூட்டிட்டு போயி விட்டுருப்பாரு என முழு மூச்சாக பேசி முடித்தாள்....
வேந்தனுக்கும், செந்தமிழிற்கும் நெகிழ்ச்சியாக இருந்தது....பழனியின் தாய் மீது மதிப்பு அதிகரிக்க தான் செய்தது....சரிம்மா இப்போ நீங்க பழனிய இங்க கொண்டு வந்து விட்டுடீங்கனா அவன் அப்பா வந்து பிரச்சனை பண்ண மாட்டாரா என செந்தமிழ் தன் சந்தேகத்தை கேட்டாள்....
இல்லம்மா இன்னைக்கு ராத்திரி எங்க சனங்க எல்லாம் சேர்ந்து லாரில வெளி ஊருக்கு போரோம்...என்ன ஊருனு கூட எங்களுக்கு தெரியாது...அவரு நல்லா குடிச்சிட்டு லாரில படுத்து கெடக்குறாறு..பழனிய இப்போ தேட மாட்டாரு....வழியில வண்டி நிக்கிறப்ப பழனி எங்கயோ தொலைஞ்சி போய்ட்டானு நான் சொல்லிகிறேன் என் புள்ள எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் அவன் ஆசைபட்ட மாதிரி அவன படிக்க வைங்க தம்பி....பெத்தவங்க மேல இருக்குற வெறுப்பு அவனுக்கு அப்படியே இருக்கட்டும் அப்புறம் அவன் எங்க நெனப்புலயே படிக்காம போய்ட போரான் என சொல்லி கொண்டே தன் அழுகையை கட்டுபடுத்தி கொண்டு வேகமாக தன் ஊரை நோக்கி நடக்க ஆரம்பித்தாள் பழனியின் தாய்....
இருளில் அவள் உருவம் மறையும் வரை கண்ணிமைக்காமல் பார்த்து கொண்டு இருந்தனர் வேந்தனும், செந்தமிழும்.....
“பழனியிடம் எதையெதையோ சொல்லி சமாளித்து விட்டாயிற்று....குறிப்பிட்ட கால கற்றலுக்கு பிறகு மற்ற பிள்ளைகள் அனைவரும் தங்கள் ஊருக்கு சென்று விட்டனர்...புதிய மாணவர்களும் சேர்ந்த வண்ணம் இருந்தனர்“....
“பழனி மட்டும் அறக்கட்டளையில் வேந்தனின் உதவியுடன் அவர்கள் வீட்டிலேயே தங்கி படித்தான்....செந்தமிழ் தாயாகவே மாறி விட்டாள் பழனிக்கு“...
‘’காலம் ஓடியதே தெரியவில்லை..பழனி இன்று காவல்துறை பயிற்ச்சி முடிந்து வரும் நாள்....அவனுக்காகவே ஆசையாக காத்து இருந்தனர் வேந்தனும், செந்தமிழும்....
காக்கிசட்டையில் கம்பீரமாக மின்னி கொண்டு இருந்த பழனியை பார்க்கும் போதே செந்தமிழின் கண்களில் ஆனந்த கண்ணீர்....நேற்று தான் நடந்தது போல் உள்ளது...அன்னைக்கு இதே இடத்தில் தானே சொன்னாய் போலிஸ் ஆக போரேனு என நெகிழ்ச்சியாக கூற அங்கு இருந்த மூவருக்குமே பழைய நியாபகம் தொற்றி கொண்டது.’’..
‘’பழனிக்கு தன் தாயின் நியாபகம் வந்தது...அன்று கதற கதற பணத்திற்கான என்னை என் தாய் விற்க சென்றாள் நீங்கள் இருவரும் இல்லை என்றால் என் நிலை என்ன ஆகி இருக்கும் என கண்ணீருடன் நன்றி கூறிய பழனியின் கையை பிடித்த வேந்தன்,இல்லை நீ நினைப்பது தவறு பழனி இப்போதும் நீ படித்து நல்ல நிலைமையில் இருக்க காரணம் உன் தாய் தான்’’....
‘’பழனிக்கு ஒன்றும் புரியவில்லை... செந்தமிழ் நடந்தவற்றை விளக்கமான கூறி அவனுக்கு புரிவ வைத்தாள்..தன் தாயை இத்தனை வருடம் தவறாக நினைத்து விட்டோமே என வெட்கப்பட்டான்.’’..
‘’சார் நான் இப்போதே என் அம்மாவை பார்க்க வேண்டும் என குழந்தையாகவே மாறி கண்ணீர் விட்டான் பழனி.’’...
‘’பொறு பழனி, உன் அம்மா இப்போது இங்கு தான் இருக்கிறார் என வேந்தன் சொல்ல இந்த செய்தி செந்தமிழிற்கும் புதிது....அவள் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை தன் மகனாகவே வளர்த்த பழனியின் தாய் இன்று வந்து விட்டாள் இனி அவனக்கு நான் தாய் இல்லையா என உள்ளூர பொறும்பினாள்’’...
‘’அவளது சிந்தனையை உணர்ந்தவனாய் அவளை கட்டுப்படுத்தும் விதமாக கையை ஆதரவாக பற்றினான் வேந்தன்....பழனியின் ஆர்வம் மேலிட்டது...சார் சொல்லுங்க எங்க அம்மா எங்க இருக்காங்க என கேட்டு கொண்டு இருக்கும் போதே உள்ளே வந்தாள் பழனியின் தாய்’’...
‘’விதவை கோலத்தில் தன் இரு மகள்களுடன் எளிமையாக காட்சி அளித்த தன் தாயை பார்க்கையில் பழனி தன்னையும் அறியாமல் அம்மா என அழைத்து கொண்டே கட்டி அணைத்து கொண்டான் தன் தாயை’’...
‘’என் மகன் பழனியாப்பா நீ எப்படி வளர்ந்துட்ட இது போதும் இம்மா நாளு நான் உசுரோட இருந்ததுக்கு அர்த்தம் கெடச்சுடுச்சி...இனிமே உன் கையில உன் தங்கச்சிங்கள ஒப்படைச்சுட்டு நான் உங்க அப்பா போன இடத்துக்கே நிம்மதியா போய் சேர்ந்துடுவேன் என்றவளை, தனக்காக எதுவுமே செய்யாத கணவனை இவளாள் எப்படி நேசிக்க முடிகிறது என செந்தமிழ் மரியாதையுடன் பார்த்தாள்.......
‘’கண்ணு சின்ன பிள்ளையில சொல்லுவியே போலிஸ் ஆனா என்னலாம் செய்வனு அத இந்த அம்மாவிக்காக ஒரு தடவ சொல்லுவியா என கேட்ட தாயிடம் அழுது கொண்டே ஒரு வரி மறக்காமல் அப்படியே சொன்னான் பழனி.“....
“தம்பி என் பிள்ளைய பாத்திங்களா எப்படி இத்தன வருஷம் கழிச்சி ஒரு வார்த்தை கூட மாறாம அப்படியே ஒப்பிக்குதுனு என நெகிழ்ச்சியாக கூறினாள் அவனது தாய்.“..
“அந்த இடமே சிறிது நேரம் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்டது.....பழனிக்கு தன் குடும்பத்துடன் தங்க தனியாக வீடும் பார்த்து இருந்தார் வேந்தன்....இது அனைத்தும் செந்தமிழிற்கு தெரியாது....தெரிந்தால் வேதனைபடுவாள் என மறைத்து வைத்து இருந்தார்“...
“துடித்து தான் போனால் செந்தமிழ்.....பழனியின் அன்பால் தனக்கென்று ஒரு குழந்தை இல்லாததையே மறந்து விட்டாள்...இப்போது திடீரென அவன் குடும்பம் வந்து அவனை உறவு கொண்டாடுவதை அவள் விரும்பவில்லை...பழனி என் மகன் அவனை விட்டு தரமாட்டேன் என கதற வேண்டும் போல் இருந்தது அவளுக்கு“...
“வேந்தனுக்கும் வேதனை தான் ஆனால் இத்தனை நாள் வறுமையில் தவித்த அவனது குடும்பத்தை பார்த்து கொள்ளும் பொறுப்பு அவனுக்கு இருக்கிறது என்பதை உணர்ந்ததால் தான் போராடி அவன் குடும்பத்தை கண்டுபிடித்து இத்தனை ஏற்ப்பாட்டையும் செய்து இருந்தான்“...
“தம்பி என் பிள்ளையை இத்தனை காலம் நீங்க படிக்க வைச்சு நல்ல துணிமணி உடுத்தி, சாப்பாடு போட்டு பெத்த தாய்,தகப்பன் மாதிரி பாத்துகிட்டு இருந்து இருக்கிங்க...இதுக்கெல்லாம் நன்றி கடனா காலம் பூராவும் நானும் என் குடும்பமும் உங்களுக்கு சேவை செஞ்சா கூட தப்பு இல்லை...எங்களுக்குனு தனி வீடு எல்லாம் எதுவும் வேணாம்..எனக்கு இந்த பள்ளிகூடத்துல எதாவது வேலை போட்டு குடுங்க...கடைசி காலத்துல புண்ணியத்தை சேர்த்துகிறேன்...பழனி உங்க கூடயே இருக்கட்டும்...இந்த பதில் யாரும் எதிர்பார்க்காதது“..
“செந்தமிழிற்கு ஆச்சர்யமாக இருந்தது....எத்தனை உயர்ந்த குணம் இவளுக்கு....நான் இவளது பிள்ளையை உரிமை கொண்டாட நினைக்கிறேன்...ஆனால் இவளோ வளர்த்த நன்றிக்காக என்னிடமே தர நினைக்கிறாளே அதிர்ந்து தான் போனாள்“...
“பழனியின் தாயே சொல்லி விட்டாள் பழனியை நம்முடனே வைத்து கொண்டால் என்ன? வேந்தன் மனம் ஒரு நிமிடம் தடுமாறியது....செந்தமிழ் சிறிதும் யோசிக்கவில்லை’’....
‘’நேராக பழனியின் அம்மாவிடம் சென்றவள், பழனியின் கையை பிடித்து அவளது கையில் ஒப்படைத்தாள்....இல்லைம்மா பழனி உங்க கூட தான் இருக்கனும்...அது தாய் நியாயம்...பழனியை படிக்க வைத்தது எங்கள் கடமை... படித்து இன்று அவன் சொந்த காலில் நிற்கும் தகுதியை பெற்று விட்டான் இனி அவனது கடமை உங்கள் குடும்பத்தை பார்த்து கொள்வது, அது தான் தர்மம்’’...
‘’அவனுக்கு வேலை பக்கத்து நகரத்தில் கிடைத்து உள்ளது. நீங்கள் குடும்பத்துடன் சென்று அங்கு தங்கி கொள்ளுங்கள் என பேசி முடித்தாள்’’...
‘’சிறிது நேரம் மௌனம் நீடித்தது....பழனியின் தாய்க்கும் சம்மதம் புறப்பட தயாரானார்கள்.... வேந்தனுக்கு பெருமிதமாக இருந்தது தன் மனைவியின் முடிவில்’’...
‘’புறப்பட தயாரானார்கள்...வேந்தனுக்கும், செந்தமிழிற்கும் வருத்தம் தான் இருப்பினும் பழனி போன்ற பலரை உருவாக்கும் பொறுப்பு அவர்களிடம் உள்ளது அல்லவா அதை நினைத்து மனதை தேற்றி கொண்டனர்’’....
‘’பழனிக்கு வருத்தம் தான் இருந்தாலும் தன் தாயை இனி கஷ்டம் இல்லாமல் பார்த்து கொள்ளும் பொறுப்பு அவனுக்கு இருப்பதை உணர்ந்தான் மேலும் பக்கத்து ஊரில் தானே இருக்க போகிறோம் நினைத்த போது வந்து பார்த்து கொள்ளலாம் என மனதை தேற்றி கொண்டான்’’...
‘’புறப்பட தயாரான நிலை...அழைத்து செல்ல வாகனம் வந்து விட்டது....பழனிக்கு செல்லவே மனதில்லை...செந்தமிழ் அழுகையை கட்டுப்படுத்தி கொண்டு கஷ்டப்பட்டு புன் சிரிப்புடன் காட்சி அளித்தாள்’’...
‘’நான் போய்ட்டு வரேன் டீச்சர்’’...
‘’சரிப்பா, பத்திரமா இருந்துக்க...உங்க அம்மாவ நல்லா பாத்துக்க...
‘’டீச்சர் எனக்கு ஒரு ஆசை!...’’
என்ன பழனி?
உங்களை அம்மா என்று ஒரு முறை அழைக்கட்டுமா?...
பழனி என்ன வார்த்தை கேட்டுட்ட, நீ அப்படி கூப்பிட மாட்டியானு எத்தனை நாள் ஏங்கி தவிச்சி இருக்கேன் தெரியுமா?...
பழனி அம்மா என அழைத்தான் செந்தமிழை...அது அவன் வாய் வார்த்தைக்கு அழைத்தது அல்ல...அவன் மனதில் இருந்து வந்த ஆத்மாத்மமான உண்மை அன்பு....
நெகிழ்ந்து தான் போனால் செந்தமிழ்.... அம்மா என்ற வார்த்தைக்கு இத்தனை மகிமையா....இந்த வார்த்தை போதும் பழனி உன்னை பிரிய போர வருத்தம் எல்லாம் காத்தோட போய்டுச்சி....
என் மகன் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும் என அவனை ஆசிர்வதித்தாள் செந்தமிழ் முழு மனதுடன்....
அவளுக்குள் இப்போது எந்த வருத்தமும் இல்லை....பழனியின் மனதில் தனக்கு இருக்கும் ஸ்தானத்தை உணர்ந்து கொண்டாள்.....
அவள் மனதில் இப்போது இருப்பது எல்லாம் ஒன்றே ஒன்று தான் பழனி போன்ற பல குழந்தைகளை நல்ல நிலமைக்கு கொண்டு வரவேண்டும்....
யோசனையுடன் தன் கணவனை பார்த்தாள்... நான் இருக்கிறேன் உன் லட்சியத்தை நிறைவேற்ற என்பது போல தோன்றியது வேந்தனின் பார்வை....
( முற்றும்)

எழுதியவர் : மங்கை (10-Jan-14, 9:42 pm)
Tanglish : palani
பார்வை : 219

மேலே