கருணை மிகுந்த கடவுள்

இவ்வுலகின் மீது பாசமாக இரு - அதேசமயம் உன்
இலக்கின் மீது தீர்க்கமாக இரு....!

அன்பும் பாசமும் அடிமைக்காக் கூடும் - அழகான
அந்த ஆண்டவனின் பதம் மட்டுமே நம்மை
அடுத்ததாய் அவனாக ஆக்கும்...!

திரைப்படக் காட்சிகளில் ஞானியராய் நடிப்பவர்
திறம்பட இறைவனில் கலப்பதாய் - விழி
திறந்தே நாம் காண்பதுண்டு....

கிராபிக்சில் வேண்டுமானால் அது பொய் - நாத்திக
கிறுக்கர்களின் கருத்தைப் போல் கடவுள் பொய் அல்ல......!

இன்னும் குழந்தைகளையும் - குழந்தை உள்ளம் படைத்தவர்களையும் நேசித்தபடி நீங்களும்
குழந்தையாகவே மாறுகிறீர்கள்

எனவே கடவுள் இருக்கிறார்

கடவுள் நாத்திகனாகவும் படைக்கப் படுகிறார்...!

தன்னை மறந்த நிலை
மனிதனுக்கு வருவது சகஜம்.....எனவே

மனித உருவில் வந்ததால் இறைவன் தன்னை
நாத்திகன் என்று தானே சொல்லிக் கொள்கிறான்..

நான் இல்லை - என்பதனால்

நாத்திகனும் கடவுள் நிலைக்கே உயர்த்தப் படுகிறான்.....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (11-Jan-14, 6:11 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
பார்வை : 207

மேலே