உணர்வுகளே உன்னை வெல்கிறேன் பார்
சண்டை போட்டு
பறந்து சென்றது
சமாதனப் புறா.....!
இன்னும்
உணர்வுகளுக்கு
அடிமையாய்......
எப்போது
சுதந்திரம்....?
உணர்வுகள் மறத்துப் போகும் போது என்று
உளறினால் நான் முட்டாள்
உணர்வுகள் அடக்கப் படும்போது என்று
சொன்னால் நான் ஞானி
உணர்வுகளை அடிமையாக்க விடாதே என்று
சொன்னால் நான் மனிதன்....!
அவ்வளவுதான்