கற்க கசடற - அவள் குழந்தை அல்ல தெய்வம்
காலையில் எழுத்ந்ததும் படின்னு சொன்னாள்
கார்ட்டூன் சேனலை பாக்காதேன்னு சொன்னாள்
காதலை என்மீது காட்டியே சென்றாள்
காசை சம்பாதிக்க ஹாஸ்டலுக்கு சென்றாள்...!
அப்பா பாட்டி தாத்தா இருக்காங்க
அவங்கள நானும் நல்லா பாத்துக்குவேன்...
அம்மா நீயும் உன் ஒடம்பப் பாத்துக்கோ
அழாம என்னை நெனச்சி நீயும் இருந்துக்கோ...
என்ன தாத்தா இருமலா ஒனக்கு ?
இதோ மாத்திர சரியா எடுத்துக்கோ.....!
பாட்டி இதோ பேசின் இருக்கு
பாத்ரூம் முடிச்சிக்கோ மெல்லவே அசஞ்சி .....!
அப்பா ஆபீசுக்கு நேரமாச்சி...
அதான் அதிகமா ட்ரிங்க்ஸ் வேணாம்னு சொன்னேன்.......கேட்டாத்தானே....!
ஸ்கூல் வேன் வேற வர்ற நேரமாச்சி.....
சீக்கிரம்
சீக்கிரம்
சீக்கிரம்
ம்......