பணமா - குணமா
படிப்பு பணத்தைக் கொடுக்கும் - நல்ல
பண்பு குணத்தைக் கொடுக்கும்...!
அடித்து வளர்க்காதீர்கள் பிள்ளையை - மனம்
விழித்து உங்களையும் அவனோடு வளருங்கள்...!
வேப்பமர உச்சியில் பேயைக் காட்டவேண்டாம்
விழிகள் இனித்திடவே தேன் கூடு அங்கும் உண்டு..!
விபரத்தை புரிந்து கொள்ளுங்கள் - அதன் பிறகு
விவரத்தை புரிய வையுங்கள்......!
இப்படிக்கு
அதிகப் பணம் சம்பாதித்து - விரக்தி அடைந்து
அன்பு கிடைக்காத
இயந்திரமாக வழக்கப்பட்ட ஒரு
இனிமையில்லாத - மகன்....!
இன்றைய தேதியில்
இவனது சம்பளம்
அமெரிக்க டாலரில்
அறுபது கோடி......! எனினும் உண்மை
அன்பை எங்கே வாங்க....?
புரியாமல் தவிக்கிறேன்
புரிந்தவர்கள் உதவுங்களே தயவு செய்து