நட்பின் சிறப்பு

உறவும் ஊரும் உள்ளத்தில் இருந்தாலும்
உயிருள்ளவரை நிழலாய் உடனிருக்கும்
உண்மை நெஞ்சுடன் உதவிகள் செய்திடும்
உலகில் என்றும் நட்பெனும் இதயம்தான் !
உயிரான நட்பே உறவாய் நிலைத்திடும்
உள்ளத்தை புரிந்து உதவிடும் என்றும்
உணர்வாய் வாழ்ந்து உயிரில் கலந்திடும்
உண்மை அன்பை அள்ளித் தந்திடும் !
உன்னைச் சுற்றி உறவுகள் வாழ்ந்தாலும்
உந்தன் நினைவுகளே நெஞ்சில் வாழும்
உள்ளத்து உண்மைகளை மறைக்காமல்
உன்னோடு என்றும் பகிர்ந்திடும் நிச்சயம் !
உயர்வான உறவு உண்மை நட்புதான்
உயர்ந்தாலும் தாழ்ந்தாலும் மாறாதுதான்
உள்ளத்தின் வேட்கைகளை நிறைவேற்ற
உதவிடும் இதயங்களே உன்னத நட்பாகும் !
பழனி குமார்