ஊட்டி
மலைகளின் ராணியே
என்றும் குளிரூட்டுவதால்தான்
என்னவோ உன்னை ஊட்டி
என்பெயரிட்டார்களோ!!
மழைச்சொரியும் கார்மேகத்தை
மழலைகளாய் உன் மடியில்
தவல்கின்றனரே...!!
தவழும் மேகமென்னை தழுவும்
காற்றை அணைத்துக்கொள்ள
கைகள் குறுகும் முடியாமல்
உடம்பெல்லாம் நடனமிடும்
உதடுகள் நாதமிடும் அதற்கு
குளிரென்று சொன்னதாரோ
நயமென்றல்லவா சொல்ல வேண்டும்
உன் அணைப்பில் கதகதப்பாய்
இருந்திட ஆசை!!!
பச்சை மெத்தையாம் புல்வெளிகள்
படுத்து உறங்கிட ஆசை!!!
இதயம் போன்ற துடிப்புடன்
நடக்கும் ரயிலில் உலவி
உன்னை ரசித்திட ஆசை!!
வருடம் ஒருமுறை வந்தாலும்
வண்ண வண்ண கூட்டமாய்
வசந்தமாய் வாசமிடும்
கண்கவரும் ரோஜா கண்காட்சியில்
கரைந்து போக ஆசை..!!!
சுற்றி சுற்றி வரும் பெண்கள் மட்டுமா இன்பம்
இல்லை இல்லை சுற்றி சுற்றி வரும்
உதகையும் இன்பம்தான்....!!!!