வாழ்த்தினால் பொங்கப் போமோ
![](https://eluthu.com/images/loading.gif)
சத்திரம் அமைத்தல் விட்டார்;
=சாலைகள் சோலை யென்று
சுத்தமில் லாத செய்து
=சுயம்பொருள் சம்பா திப்பார்!
வித்தியா சாலைக் கான
=மராமத்து வேலை செய்யார்!
சத்திய மில்லார் கூட்டில்
=சகலமும் வணிக மென்பார்!
சித்திர மக்கள் கேளார்!
=சேர்ந்தவர் கூட்டில் தாமும்
நித்தியப் பங்கு கேட்டு
=நிற்கிறார் கட்சி என்றே!
சொத்தினில் உரிமை சொல்லிச்
=சொந்த,அன் னைக்கே வேட்டு
வைத்ததில் மகிழ்ந்து போவார்!
=வாழ்க்கையும் பொங்கப் போமோ?
===== =====