கண்ணீர் பூக்களாக்கி விடாதிர்கள்

என்னை விட்டு போனவர்களுக்காக
நான் கவலை படவில்லை :::::!

என்னை விட்டு போக கூடாது என்பதற்காகவே .....

இதயத்தால் பெரும் பாதுகாப்பு வலையம் அமைத்திருந்தேன்.....

அதையும் தாண்டி விட்டு போனவர்கள் தான் ......

எனக்கு இந்த வாழ்வை கற்று தந்து போனார்கள் .......

ஒரு பொய் தோற்று இருந்தால்
நானும் போலியாய் இருந்து இருப்பேன் ....

என் உண்மை ஒவ்வொரு இடமும் தோற்றது .......

அதற்கு காரணம் தேடினேன்
எனக்கு கவிதை பிறந்தது .....!!!

இன்றுவரை என் தாய்,நண்பன், காதலி குழந்தை எல்லாமே கவிதை தான் ......!!!!

ஏனெனில் எல்லாவற்றாலும் ஏமாற்ற பட்டவன்
கடைசியாய் இருந்த அன்பாலும்
ஏமாற்ற பட்டால் .......!

அவனுக்கு தோல்வி தான்:::::!!!!

எனக்கும் கிடைத்த கடைசி கயிறு இந்த தோல்விகயிறு தான் அதை அன்று கழுத்தில் போட்டு போயிருக்கலாம் .....!!!

ஒரு நிமிட வலி ஆனால் நான் அதை இடிந்துகொண்டிருக்கும் இதயத்திற்கு கட்டினேன் ......!

அதனால் தான் இமயத்திற்கு பாதை போட்டு என் பயணத்தை தொடர்கிறேன் .......!!!!

இப்போதும் என்னை ஏமாற்றி போகும் ஒவ்வொரு உறவையும் நினைத்து அழுவேன் .......!!!!

அழுது முடியும் போது கடைசி கண்ணீர் .....
என் கையில் விழுந்து என் கவிதையில் ...
முளைத்து புன்னகைக்கும்.....!!!!

ஆதலால் தான் இன்னும் உண்மையான அன்பு எங்கிருக்கிறது என தேடிகொண்டிருக்கிறேன் ......!!!

என்னை விட்டு அல்ல
எல்லா உள்ளங்களின் மனதிலும்
"உன்னி "மாதிரி ஓட்டியிருந்துவிட்டு சந்தர்பம் பார்த்து கழன்று போகும் போலி உன்னதங்களே .....!!!

இந்த வாழ்க்கையில் எப்போது உண்மையாய் இருக்கபோகிறீர்கள்
அன்பு செலுத்தினால் விட்டு பிரியாதிர்கள் உங்கள் ஒற்றை அன்பை நம்பியபடியால்
கூட ......!!!

அவன் வீட்டில் பூக்கள் பூக்கலாம்
அதை பின்பு அவனுக்கே
கண்ணீர் பூக்களாக்கி விடாதிர்கள் .............!!!!

எழுதியவர் : Akramshaaa (12-Jan-14, 7:09 am)
பார்வை : 64

மேலே