வாக்குகளின் சூத்திரம்
தேர்தல் வரின்
வாயடிக்கும் எங்களின் பக்தர்களே !
தேர்வு பெரின்
வாயடைக்கும் நிலை எமக்கு ஏன் ?
வான் உயர்
சுவரொட்டி ஏன் ?
ஆளுயர மாலையும் ஏன் ?
நீவிர்
வரும் வழி தோரணம் ஏன் ?
உம்மை
எமக்கு நினைவூட்டவா ?
நீவிர் வாய் திறந்த நேரமெது
வாய் மூடி மவுனியான களமெது
அத்தனையும் எமக்கு இன்றும்
நிதர்சனமாய் தெரியும் அய்யா
வாக்களிக்கும் சூத்திரம்
வாக்காள குடி ( ? ) மக்களாம்
வாமனர் எமக்கு தெரியாதா ?
வாக்கு வங்கி தெய்வம் எமக்குங்கள்
வரவம் புரியும் வாரவும் தெரியும்.
ஆகையினால் ஐந்தாண்டு பக்தர்களே
சுற்ற வேண்டாம் சூராவளியாய்
சென்ற முறை நீவிர் சற்றியதே
இன்னும் உண்டு எம் காதில் சறுகாய் . . .! ! !