பயணம்
நடந்து கொண்டே இருக்கிறேன்,
சிலநேரம் ஓடவும் செய்கிறேன்,
பசும்புல் போர்த்திய ஒற்றையடிப்பாதை,
பாதங்கள் ரத்தமாய் இருக்கிறது,
புல்லின் வேர் முள்ளாக இருக்கமுடியுமா?!
இந்த சந்தேகம் என் ஓட்டத்தை
நிறுத்தவில்லை, ஓடிகொண்டே இருக்கிறேன்.