சாதனை என்பதே சரித்திர மூச்சு
கண்ணன் சொன்னான் கீதை
எண்ணிச் செல்லவன் பாதை.
பின்னே தொடரும் தீதை
முன்னே உணர்க தோதை.
பாவம் வந்தும் தீரும்.
பாடம் கற்றும் நீரும்.
சாபம் பெறுவதும் பாவம்`
சத்தியம் வெல்வதும் யோகம்.
மேகத் தூசும் மூடும்.
மெலிந்தும் தானே ஓடும்.
தூய்மை பொறுமை வாழும்.
தோற்ப தில்லை நாளும்.
நாரதம் தூண்டும் கலகம்.
நன்மை முடிந்தால் நலமே!
ஊறெதும் செய்வதும் பாவம்.
உண்மை நிலவும் நிசமே!
விடியலை நோக்கி ஓடு!.
விழிகளில் தேக்கித் தேடு!.
கனவுகள் ஊக்கு நினைவில்!.
கதவுகள் நீக்கு கடமையில!.
இயலாதென்பதும் முயலான் பேச்சு !
அயர்ந்தால்பொன் காலம் போச்சு.!
சாதனை என்பதே சரித்திர மூச்சு !
சனனம் என்பதன் அர்த்தம் ஆச்சு.!
இயற்கை என்பது தேடல்க் கொடை!
செயற்கை என்பது தேடிய விடை!
எடுத்து வைய்யுன் வெற்றி நடை!
இலக்கு அதோ தெரியுது அடை!
கொ.பெ.பி.அய்யா.