43 மீண்டும் கைகொடுக்கும் எனும் நம்பிக்கை

சொந்தக் கவிதை - 43
மாலைக் கதிரவன் மறைந்தது கண்டு
நான் கலங்கியதில்லை ஏனெனில்
கதிரவன் மீண்டும் உதிக்கும் எனும் நம்பிக்கை

தோட்டத்து மலர்கள் உதிர்வதுகண்டு
நான் துடித்ததில்லை ஏனெனில்
செடி மீண்டும் பூக்கும் எனும் நம்பிக்கை

தேய்ந்து வரும் நிலவைக்கண்டு
நான் வருந்தியதில்லை ஏனெனில்
முழுநிலவு மீண்டும் பவனிவரும் எனும் நம்பிக்கை

உருகிக் கொண் டிருக்கும் மெழுகைக்கண்டு
நான் வாடியதில்லை எனெனில்
ஒளிஏற்ற மீண்டும் மெழுகு உண்டு எனும் நம்பிக்கை

தடுக்கி கீழே விழுந்தபோது
நான் நிலைதடுமாறியதில்லை ஏனெனில்
எழுந்து மீண்டும் நிற்பேன் எனும் நம்பிக்கை

உறவுகள் என்னை ஒதுக்கியபோது
நான் கண்ணீர்விட்டதில்லை ஏனெனில்
நாங்கள் மீண்டும் இணைவோம் எனும் நம்பிக்கை

குறைந்துவரும் இளமை கண்டு
நான் செயலற்று போகவில்லை ஏனெனில்
முதுமை மீண்டும் ஓர்சுகமான அனுபவம் எனும் நம்பிக்கை

எத்தனை சோதனை வந்தாலும்
நான் மனம் தளர்வதில்லை ஏனெனில்
என்நம்பிக்கை மீண்டும் மீண்டும் கைகொடுக்கும் எனும் நம்பிக்கை

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (13-Jan-14, 7:53 pm)
பார்வை : 86

மேலே