GANESH K - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : GANESH K |
இடம் | : Chennai |
பிறந்த தேதி | : 13-Sep-1989 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 30-Dec-2013 |
பார்த்தவர்கள் | : 49 |
புள்ளி | : 20 |
எப்போதாவது ஏதோ கிறுக்குவேன், மற்றபடி ஒரு சராசரி இயந்திர வாழ்வில் சுழன்றுகொண்டு தான் இருக்கிறேன். என் கிறுக்கல்களுக்கு அர்த்தம் அறிய ஆவலோடு உள்ளேன் எப்போதும்.
என் மடிக்கணினியின் ஒளித்திரையில்,
ஓர் சிற்றெறும்பு சுதந்திரமாய்
அங்கும் இங்கும் அலைகிறது,
நான் என் சுட்டியை கொண்டு,
அதனோடயே நகர்த்தினேன்,
எறும்பும் என் சுட்டியும்
சேர்ந்தே அலைந்தோம்,
ஒரு கட்டத்தில் நான் அதற்கு
வழிக்காட்டியாக எண்ணி கொண்டு,
அது திரையில் இருந்து வெளியேறும் வழியை
சுட்டியின் மூலம் காட்டினேன்,
அது வெளியேறுவதாக இல்லை, சுட்டியில் முட்டிமோதி திணறியது
இறுதியில் நான் என் சுட்டியை அசையாது நிறுத்தினேன்,
எறும்பதன் வழி கண்டு திரையில் இருந்து வெளியேறியது,
நான் என் வேலையை கவனித்தேன்!
சுடராய் நின்றாய்,
அணைத்திட துணிந்தேன்,
எது சுடுகிறது?
நீ நெருப்பென்ற மெய்யா?
அல்லது,
வெறும் நிழலென்ற பொய்யா?
ஈரம் உலர்ந்ததும் வெய்யிலை
மறக்கும் ஆடைக்கே,
வாழ்நாள் அதிகம்!!!
மின்சாரம் போன இருளொயில்,
என் இடக்காலின் இரண்டாம் விரலில்
சுருக்கென்ற ஓர் உணர்வு,
உன் மேலான என் முதல் விரல் தீண்டல்
நினைவு வந்தது,
விளக்கு வந்தது,
என் கால்கள் செயலிழந்தது,
உடல் முழுதும் விஷம் ஏறியது,
கட்டிலின் அடைப்புக்குள்
மெல்ல நகர்ந்தது ஒரு தேள்!!!...
மழை இரவில் ஒரு கனவு,
சென்னை அண்ணா சாலை ஜெமினி மேம்பாலம்,
இருள் கவியும் நேரமாக இருக்க கூடும்,
முழுதாக முறுக்கியும்,
நடக்கும் வேகத்தில் என் இருசக்கர வாகனம் ஊர்கிறது,
எனக்கு முன்னே 16 சக்கரங்களோடு ஒரு ராட்சத வாகனம்,
இடதும் வலதுமாக நிலை தடுமாறி செல்கிறது,
அநேகமாக சென்னையில் நானும் அந்த தடுமாறும் ராட்சதனும் தான்,
பக்க சுவரை இடித்து நின்றது, என் இருசக்கரமும் நின்றது,
ஒரு சக்கர நாற்காலியில் கைலியும், முண்டா பணியனுமாக
மனிதன் ஒருவன் என்னை பார்த்து சிரித்துவிட்டு
கைகளால் அவன் சக்கர நாற்காலியை நகர்த்தி நகர்ந்தான்,
அந்த மனிதன் தான் அந்த ராட்சத வாகனத்தை ஓட்டி வந்தவனாக இருக்க வேண்டும்!
ந
நடந்து கொண்டே இருக்கிறேன்,
சிலநேரம் ஓடவும் செய்கிறேன்,
பசும்புல் போர்த்திய ஒற்றையடிப்பாதை,
பாதங்கள் ரத்தமாய் இருக்கிறது,
புல்லின் வேர் முள்ளாக இருக்கமுடியுமா?!
இந்த சந்தேகம் என் ஓட்டத்தை
நிறுத்தவில்லை, ஓடிகொண்டே இருக்கிறேன்.
போதும் என்ற எண்ணம் மனதில் எப்போது வரும் ?
சொந்தங்கள் சேரும் போது யாருக்கு யார் தலைமை
பட்டாம்பூச்சி என்றால் உங்கள் நினைவுக்கு வருவது