தேள்
மின்சாரம் போன இருளொயில்,
என் இடக்காலின் இரண்டாம் விரலில்
சுருக்கென்ற ஓர் உணர்வு,
உன் மேலான என் முதல் விரல் தீண்டல்
நினைவு வந்தது,
விளக்கு வந்தது,
என் கால்கள் செயலிழந்தது,
உடல் முழுதும் விஷம் ஏறியது,
கட்டிலின் அடைப்புக்குள்
மெல்ல நகர்ந்தது ஒரு தேள்!!!...