இப்படி ஓர் பெண்
அவளின் ரவிக்கை
ரம்பையின் இருக்கை
அவளின் மேல்நகை
பொன்வடிவ மேனகை
அவளின் சேலை
தேவதைகள் விளையாடும் சோலை
அவள் காலணி
அணியும் கலைவாணி
இந்த அழகி பிறந்தபின்புதான்
அங்கம்மா எனும் பெயர்கொண்ட
இவள் அம்மா அழகம்மாவானாள்
இவள் படத்தைதான்
பிரம்மன் சாதனை விருதுக்கு
சமர்ப்பித்தான் சர்வேசனிடன்
இவள் ஐஸ்வர்யா
தயாரித்த ஐஸ்கிரீம்
இவள் பூவைக்கப் பிறந்தவள் அல்ல
பூவைக்குப் பிறந்தவள்
இவள் தாவணி
அணிந்து நடக்கும் பூ ஹனி
இந்த வெள்ளைக்காரியைக் கண்டிருந்தால்
வெள்ளையன் வெளியேறிருக்க மாட்டான்
அந்தமான் சிறைக்குச் செல்லாமல்
அந்த மானை சிறை பிடித்திருப்பார் போராளிகள்
தேரோட்டம் நடப்பதற்குப் பதில்
அவள் நடந்தாள் தேராட்டம் அவள் ஊரில்
இவள் கதாநாயகியாக நடிக்கும் படத்தில்
ஐஸ்வர்யா தோழியாக இவளுக்கு
அவள் பொட்டு வைத்த லட்டு
சாதம் பொட்டு வைத்த தட்டு