தடையேதுமில்லை
என் மடிக்கணினியின் ஒளித்திரையில்,
ஓர் சிற்றெறும்பு சுதந்திரமாய்
அங்கும் இங்கும் அலைகிறது,
நான் என் சுட்டியை கொண்டு,
அதனோடயே நகர்த்தினேன்,
எறும்பும் என் சுட்டியும்
சேர்ந்தே அலைந்தோம்,
ஒரு கட்டத்தில் நான் அதற்கு
வழிக்காட்டியாக எண்ணி கொண்டு,
அது திரையில் இருந்து வெளியேறும் வழியை
சுட்டியின் மூலம் காட்டினேன்,
அது வெளியேறுவதாக இல்லை, சுட்டியில் முட்டிமோதி திணறியது
இறுதியில் நான் என் சுட்டியை அசையாது நிறுத்தினேன்,
எறும்பதன் வழி கண்டு திரையில் இருந்து வெளியேறியது,
நான் என் வேலையை கவனித்தேன்!