அம்மா
முன்னூறு நாள்கள் நான் கண் முடி இருந்த இடமோ உந்தன் கருவறையில்.
கண்விழித்து நான் பார்த்த போது நீ சென்ற இடமோ கல்லறையில்.
நான் கண் முடி இருந்த போது கேட்ட ஒலி உந்தன் சிரிப்பொலி.
நான் கண்விழித்த போது நான் கேட்டதோ உன்னைப் பார்த்து அனைவரும் அழுகின்ற ஒலி.
என்னை ஏன் சுமந்தாய் தாயே. எந்தன் சுமை பாரம் தாங்க முடியாமல் இறந்தாயோ நீயே.