தட்டிப்பறிப்பு

மேற்சுவரின் ஓர் மூலையில்
தூசி படிந்துள்ளது,
தூசிக்கு இடையில் எதையோ
நோக்கியபடி பல்லி,
வெகுநேரமாக.
தரையில் இருந்து பல்லியை
நோக்கியபடி நான்,
திடீரென இரைக்கு முற்பட்ட
பல்லியை தடுக்க
நானும் முற்பட்டேன்!

எழுதியவர் : கணேஷ் . க (13-Jan-14, 6:37 pm)
சேர்த்தது : GANESH K
பார்வை : 52

மேலே