பிழைத்துவிடும்

சிறு தூரல் என்றெண்ணி
சில பொழுது ​வெளிக்கிட்டால்
சிறு நடை ஓட்டமாகி
சிதைந்திடுமே பணிவிடைகள்

ஒன்றிரண்டு குடையிருந்தும்
ஒதுங்கிடலாம் ஓரிட​மென்று
ஒதுக்கிவிட்டேன் குடைதனை.
ஒதுங்கவில்லை நனைந்துவிட்டேன்

பிழைத்துவிடும் நம் எண்ண
வானிலை அவதானம்
வருமுன் காத்திடின்
வளம் பெறுமே நம் வாழ்க்கை

எழுதியவர் : ஜவ்ஹர் (13-Jan-14, 11:15 pm)
பார்வை : 56

மேலே