முதல் கவிதை -- கண்ணன்

என்னை
சிந்திக்கவைத்த
முதல் கவிதை அம்மா..!!
நான் சிந்தித்த
முதல் கவிதை அம்மா..!!
நான் பார்த்த
முதல் கவிதை அம்மா..!!
நான் பிரமித்த
முதல் கவிதை அம்மா..!!
என் மனம் நிறைத்த
முதல் கவிதை அம்மா..!!
என்னுடன் பேசிய
முதல் கவிதை அம்மா..!!
என்னை பேசவைத்த
முதல் கவிதை அம்மா..!!
நான் மொழிந்த
முதல் கவிதை அம்மா..!!
என்னை எழுதவைத்த
முதல் கவிதை அம்மா..!!
நெல்லில் எழுதிய
முதல் கவிதை 'அ'ம்மா..!!
நான் வாசித்த
முதல் கவிதை அம்மா..!!
என்னுள்
அழியாதிருக்கும்
அந்த ஒரு கவிதை அம்மா..!!