பொங்கலோ பொங்கல்

தித்திக்கும் தமிழ் போல‌
பொங்கட்டும் பொங்கலது
புதுப்பானையில் இட்ட பொங்கல் போல‌
திகழட்டும் தேசமது
திகட்டாத கரும்பு போல‌
இனிக்கட்டும் மனிதனின் மனது
நெய்யில் வறுத்த முந்திரி போல‌
வாசம் பெருகட்டும் பூமியெங்கும்

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

எழுதியவர் : வே.புனிதா வேளாங்கண்ணி (14-Jan-14, 2:29 pm)
Tanglish : pongalo pongal
பார்வை : 1177

மேலே