சுயநலம் மாற்றி பிறரையும் நோக்குவோம்
தான் படுத்தால் போதும் பஞ்சு மெத்தையில்!
அடுத்தவன் வெந்தால் என்ன? நொந்தால் என்ன?
நாம் மட்டும் வாழுவோம் இந்த பூமியில் என
எண்ணம் கொண்டோர் ஓர்நாள் துன்ப குட்டையில் துவளுவது உறுதி.
நம் நகரமது தீப்பற்றி நரகமாக எரிகிறபோது
அடுத்தவர் துன்புற நாம் வீணை வாசிக்கலாமா?
தான் வாழ்வு ஒன்று தான் சுயநலம் கொண்டார்க்கு!
பிறர் நலம் காக்கவோ மனம் இல்லை அவர்க்கு.
தனிமையில் வாழ்ந்து மடிவது சுகமா?
சுயநலம் மாற்றி பிறரையும் நோக்குவோம்.
பிறர் நலம் போற்றுதல் தீங்கு இல்லை நமக்கு.
மண்ணிலே வாழும் யாவரும் கேளிர்.
நாமும் வாழ்ந்து பிறரையும் வாழ்விப்போம்.