கற்பூரம் தான் நான் ஆயினும் என்ன
கற்பூர வாழ்வை எண்ணி கரைந்தேன் மனதிற்குள்ளே.
பிறப்பதும் எதற்காக? இறப்பதும் எதற்காக?
மனிதனுக்கும் இறைவனுக்கும் மத்தியில் நான்.
மனிதனுக்காக நான் இறைவனுக்கு முன்னால் தினமும் கரைகிறேன்.
கற்பூரம் தான் நான். ஆயினும் என்ன?
பிறருக்காக தானே கரைகிறேன்!
ஆராதிக்க படுகிறேன்!
சிந்தனை நெருப்பு ஒன்று என்னை தீண்டியது.
நான் கலங்க வில்லை.
மனிதனுக்காக நான் இறைவனிடம் வேண்டினேன்.
நான் பிறருக்காக தினமும் கரைந்து கொண்டே இருக்கிறேன்.
நீயோ கல் போன்று தானே இன்னும் நின்று கொண்டு இருக்கிறாய்!