கவிதைகளை தூதுவிட்டு எண்ணத்தை சொல்கிறேன்
உன்னிடம் கால ஓடையிலே உள்ள கப்பலை தூதனுப்பி வேண்டினேன்!
துன்ப புயலது துரத்தியதால் கப்பல்
உன் மன கரையோரம் நின்றே வேடிக்கை பார்த்தது.
காற்றை தூதனுப்பி போய் வர சொன்னால்
உன் மனம் நிலவு போன்றது என்று
போக மனமில்லை அதற்கு!
ஆற்றை தூதனுப்பி போய் வர சொன்னால்
உன் மனம் கோடை காலம் என போக மனமில்லை அதற்கு!
நிலவை தூதனுப்பி போய் வர சொன்னால்
அமாவாசை என சொல்லி போக மறந்தது!
ஏழு வண்ண வானவில்லை ஏழை நான் தூது விட்டேன்!
ஏழு நொடியில் அது எங்கோ மறைந்தது!
அன்னத்தை தூதுவிட்டு என்னத்தை நான் செய்வேன்! என் எண்ணத்தை உன்னிடம்
சொல்ல தெரியா பறவை அது !
இயற்கையின் தூதுகளை அனுப்ப முடியாமல்
கவிதைகளை தூதுவிட்டு எண்ணத்தை சொல்கிறேன்!