கவிஞனின் தேடல்

ஒவ்வொரு படைப்பையும்
படைக்கும் போது அதற்கேற்ப
ஒவ்வொரு கவிஞனும் தன்னைத்தானே
மாற்றி கொள்கிறான்

சிற்ப்பியை போல காத்து
முத்துகளாய் தன் படைப்பை படைக்கிறான்
சிற்பம் போல தன் படைப்பை செதுக்கிறான்

ஒவ்வொரு படைப்பையும் நிறைவு செய்யும் போதே
அடுத்த படைப்பை பற்றி பயமும் சிந்தைனையும்
அவனுள்ளே ஆட்கொள்ளும்

கற்பனை சிறகுகளால் உயர பறந்து --தன்
காணும் காட்சிகளையும்
உணரும் உணர்வுகைளையும்
படைப்புகளாய் எழுதுகிறான்

ஒவ்வொரு கவிஞனும்
காதலில் கலந்து
காதலின் அழகையும்,அழுகையும்..........!

வாழ்கையை புரிந்து
வழிகளையும்,வேதனைகளும்............!

அன்பை அறிந்து
அம்மாவின் தனிசிறைப்பையும்.................!

நட்பை ரசித்து
நண்பர்களின் நினைவுகளைவும்..............!

இயற்கையை பார்த்து அதன்
எழிளையும் ,அழகையும்..................!

இப்படி................!
தன்னுள் பல விதமாக மாறி
மெழுகாய் உருகி படைத்தாளும்
அவர்களின் அழ்மனதின்
வலியையும் உணர்வுகளையும்
முழுதும் எழுத முடியாமல் தவிக்கிறான்
ஒரு ஊமை போல தன்னுள்ளே துடிக்கிறான்

எத்தனை ஆயிரம் படைப்புகளை படைத்தாளும்
இம்மண்ணில் ஜீவன் உள்ளவரை
ஒரு கவிஞனின் தேடல்
என்றுமே முடிவதே இல்லை..................!

எழுதியவர் : சு .சங்கத்தமிழன் (14-Jan-14, 4:41 pm)
Tanglish : KAVIGNANIN thedal
பார்வை : 72

மேலே