காத்துக்கிடக்கின்றேன்
உன் கரங்களைப் பிடித்து
காதல் வரங்களைப் பெற
ஏங்கினேன் !
என் வரைமுறைத் தவறி
உன் விதிமுறைகளில்
வீழ்ந்துக்கிடக்கின்றேன்!
வீதி எங்கும் விடைதேடி
விடிகின்றன ......
என் விடியல்கள் !
உன் விழி மட்டும் போதுமடி
பெண்ணே !
என் வழி மாறிப்போகும்
கண்ணே!
காத்துக்கிடக்கின்றேன்....
கவிதைகளைக் கரங்களிலேந்தி !
கவிதையே ,
உன் கரம் சேர வேண்டுமடி!
என் மனம் என்னைத் தீண்டுதடி.....!