தங்கத்திற்கு ஒரு தங்கப் பதக்கம்

தாண்டிப் பழகிச் செயிப்பேன் - விபத்தில்
தவறி விட்டது ஒரு கால்..! போகட்டும்...!!
தன்னம்பிக்-கால்-உந்தி எனை உயர்த்த
தாவியே ஒரு அடி உயரச் சென்று செயிப்பேன்..!!

கால் போனவனென்று கரிசனம் வேண்டாம்
கட்டுங்கள் இலக்கை உங்கள் விளையாட்டு விதிப்படி
காட்டுகிறேன் நான் யாரென்று
கட்டாயமாய் இப்போட்டியில் வென்று

காத்திருந்து பாருங்கள் - நிச்சயமாய்
கண்ணீருக்கு விடை கொடுத்து உங்கள்
கரகோஷம் விண்ணை தாண்டும்..... என்

கழுத்திலே இப்போதே தங்கப் பதக்கம் - அந்தக்
கதிரவன் ஒளி சொலிப்பாய்.....!!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Jan-14, 1:44 am)
பார்வை : 76

மேலே