மவுனமாக அழுகின்ற மலர்கள்

நிலா நிலா ஓடிவா
நீ கண்தானம் எனக்கு கொடுக்க வா....!

சின்னப் பிள்ளை நானுமே
என்ன செய்தேன் பாவமே ?!

மலரைப் படைத்து மணத்தை பறிக்கும்
மனத்தைக் கொண்டாய் இறைவனே

மழலை நானும் இருளில் இருக்க
மனிதப் பிறவியும் தந்தாயே.....

பார்வையற்றோர் பள்ளியிலே
படிக்கும் ஏழை சிறுமி நான்.......

பரிதவிக்கும் என் நிலையறியாய் - அடப்
பகவானே நீ என்ன நிறம் ?

நிலா நிலா ஓடிவா
நீ கண்தானம் எனக்கு கொடுக்க வா....!

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (15-Jan-14, 1:03 am)
பார்வை : 113

மேலே