அடித்துச் செல்லும் வெள்ளம்
பற்றிக் கொள்ள இறைவன் உண்டு
பயமா எனக்கு வீழ்வதற்கு ?!
தொற்றிக் கொண்டேன் இங்கே கிளையில்
தூய தெய்வம் யாரின் வடிவில் ?!
அணுவிற்குள்ளும் அவனே உண்டு - அவன் மீது
அவநம்பிக்கை கொண்டோர் மனதிலும் உண்டு..
இதோ இந்தக் கிளையின் வடிவே
இறைவன் மலர்ப்பதம் என்றே பற்றி.....
எதிரே வெள்ளச் சூழலை காண்கிறேன்...மனித
பக்தகோடிகள் பலபேர் அலறியபடி அடித்துச் செல்லப் படுகிறார்கள்......!
வல்லூறுகளுக்கு நல்ல வேட்டை - இனி
வழியட்டும் வெள்ளம் பிறகு தெரியும்.....
வீசிய ரொட்டித் துண்டிலும்
விவரமாக ஊழல் என்று......
இறைவா காப்பாற்று........!
உன்னை நீயே......