திறந்தது தையின் கதவுகள்
தையின்கத வுகள்திறந் ததுஅதன் உதயத்தின்
கையில்கரும் பும்தெரிந் ததுநெற் மணிக்
களஞ்சியம்கைக் குத்தல்அ ரிசியாய்ஆ னதுமண்
களஞ்சியத்தில் வெல்லமுடன் கலந்து வெண்
நுரைப்பொங்கி சர்க்கரைப் பொங்கலாய் கண்
நுரைப்பொங்க நாவழியேக் கூவியது எம்
மதம்பாரா மல்சமத்து வப்பொங்கல் தந்தது.
மண்வாசம் பொங்கலாய் பானையில்பொங்கியது.
மனதில் மகிழ்வும் நெகிழ்வும் தங்கியது.
உழுதவன் வீட்டிலும் உவகை வந்தது.
உழவுமாடு களும்உற் சாகம் பெற்றது.
அழுதவன் கண்களும் ஆனந்தம் கண்டது.
அச்சம் இன்றொருநாள் அகன்றேப் போனது.
தொழுதவன் தழுவிடகா ணும்பொங்கல் நாளில்
தர்மம் தானமாய் மருவிக் கொண்டது.
மனமாகப் பருவத்தி னருக்குமங் களநாளாய்
மணம்வீசும் "விஜய""தை" யாய்விஜயம் செய்தது.
மங்களமாய் ரதமேறி மனைதோறும் நன்னாளாய்
மேதினிஎங் கும்பொங்கல் திருநாளாய் பொங்கியே
மனங்குளிரும் மே"தை"யாய் உருவியே வந்தது.
உடலும் உயிரும் நெஞ்சும் நீரும்
உணர்வுப் புணரும் உத்தம நாளாய்
மடல்விழைத் தவாழை யாய்தையிவள் தம்மின்
இடரில்லா இன்பத்தாள் கதவாய் திறந்தாள்.