இறுதியில் என்ன கொண்டு போக போகிறோம்

இறக்கும்போது என்ன கொண்டு செல்கிறோம்?

இறக்கும்போது
என்ன கொண்டு செல்கிறோம்?

ஒரு மனிதன் இறந்துவிட்டான்

அதை அவன் உணர்ந்தவுடன்
இறைவன் அவனை நோக்கி
கையில் ஒரு சூட் கேசுடன் வருவதைக் கண்டான்



இறைவன் சொன்னார்
,புறப்படு நீ செல்லும் நேரம் வந்துவிட்டது என்றார்.

ஆச்சரியப்பட்ட மனிதன் இப்போழுதேவா?
இவ்வளவு சீக்கிரமா ?எனக்கு இங்கு இன்னும் நிறைய வேலைகள் பாக்கி இருக்கின்றன என்றான்

இறைவன் சொன்னார்
என்னால் உனக்கு உதவ முடியாது. நீ கிளம்பும் நேரம் வந்துவிட்டது ஆகையால் கிளம்பு என்றார்.

அது சரி , உங்கள் கையில்
ஒரு சூட் கேஸ் வைத்திருக்கிறீர்களே
அதில் என்ன இருக்கிறது என்றான்

இறைவன் பதில் சொன்னார்.
அதில் உன்னுடைய உடைமைகள் எல்லாம் இருக்கிறது.என்றார்

என்னுடைய உடைமைகளா ? என்னுடைய துணிமணிகள்,என்னுடைய பொருட்கள், நான் சம்பாதித்த பணம் ஆகியவைகள்தானே ? என்றான் மனிதன்

இறைவன் சொன்னார் :நீ சொன்னவைகள் எல்லாம் உன்னுடையவைகள்அல்ல அவைகள் இந்த பூமிக்கு சொந்தம்

அப்படி இல்லை என்றால் என்னுடைய நினைவுகளா என்று கேட்டான்
இறைவன் பதிலளித்தார்:அவைகள் உன்னுடையதல்ல .அவைகள் எல்லாம் காலத்திற்கு சொந்தம்

அப்படியானால் அவைகள் என்னுடைய திறமைகளா? என்று கேட்டான் மனிதன்

அவைகளும் உன்னுடையதல்ல அவைகள் சூழ்நிலைகளுக்கு சொந்தம் என்றார் இறைவன்

அப்படியானால் அவர்கள் என்னுடைய நண்பர்களும் உறவினர்களுமா என்றான் மனிதன்

மன்னிக்க வேண்டும் அவர்களும் உன்னுடையதல்ல .அவர்கள் உன் வாழ்க்கைப் பாதையில் வந்து போனவர்கள்

என்னுடைய மனைவியும், மகனுமா என்று கேட்டான் அவன்

இல்லை இல்லை அவர்கள் உனக்கு சொந்தமானவர்கள் அல்லர். அவர்கள் உன் இதயத்திற்கு சொந்தமானவர்கள் என்றார் இறைவன்

அதில் எனது உடலா? என்றான் அவன்

அதற்க்கு இறைவன் அதுஎன்றுமே உனதல்ல
அது அணுக்களுக்கு சொந்தம் என்றான்

அது என்னுடைய ஆத்மா தானே என்றான் அவன்

இறைவன் சொன்னார். முட்டாளே
அதுவும் உனக்கு சொந்தம் கிட்டையாது
அது எனக்குத்தான் சொந்தம் என்றார்

பயத்துடன் இறைவனிடமிருந்து சூட் கேசை வாங்கி திறந்து பார்த்தான்,அதற்குள் ஒன்றுமே இல்லை காலியாக இருந்தது.

கண்களில் நீர் வழிய இறைவனிடம் கேட்டான்.
இறைவா எனக்கென்று ஒன்றுமே கிடையாதா என்றான்

இறைவன் பதில் சொன்னார். எல்லோரும் கேட்டுக்கொள்ளுங்கள்

நீ இந்த உலகில் வாழ்ந்த
ஒவ்வொரு கணம் மட்டும்தான் உனக்கு சொந்தம்

வாழ்க்கை என்பது ஒரு கண் சிமிட்டும் நேரம்தான் .
அது மட்டும்தான் உனக்குச் சொந்தம் .

அதனால் உனக்கு கிடைத்த வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் மகிழ்ச்சியாக செலவிடு

தலைக் கனம் கொள்ளாதே ,
நீயும் மகிழ்ச்சியாக இரு.
மற்றவரையும் மகிழ்ச்சியாக இருக்க விடு .
எந்த சக்தியும் அதை தடுக்கும் வகையில் நடந்து கொள்ளாதே
,
இந்த கணமே வாழப் பழகிக்கொள்
இந்த கணத்தை வீணடித்துவிட்டு
எதிர்காலத்தில் நன்றாக வாழலாம்
என்று மனக்கோட்டை கட்டாதே .
என்னென்றால் அடுத்த கணம்
உன்னுடையதாக இல்லாமல் போகலாம்
என்பதை நினைவில் கொள்

இப்போதே வாழத் தலைப்படு
வாழ்க்கை வாழ்வதற்கே

இவ்வுலகில் பாடுபட்டு சேர்க்கும்
எந்த பொருளும் உன் உயிர் இந்த
உடலை விட்டுப் போகும்போது
உன்னுடன் என்றும் வராது என்பதைப் புரிந்துகொள்வாயாக
என்று இறைவன் மறைந்துபோனார்.

எழுதியவர் : முரளிதரன் (16-Jan-14, 8:09 pm)
பார்வை : 110

மேலே