உயிரை எல்லாம் உனக்காக கொடுக்க மாட்டேன் நண்பனே

பாசம் வச்சா படி வழுக்கும் - வாழ்வில்
நேசம் வச்சா மனம் வலிக்கும்
பார்த்து நடக்க பழகிக்கோ - மனம்
பாயாமல் நிலைக்க வச்சிக்கோ...!

அழுத பிள்ளையே பால் குடிக்கும் - வளர்ந்து
அழுதால் கவலை சாகடிக்கும்....!
உடலால் பருத்து உள்ளம் சுருங்கி
உணர்வில் அடிமையாய் வாழ்வது முறையோ ?!

உள்ளம் புரிந்து உலகம் தெரிந்து
உன்னோடு வாழ்தல் நலமன்றோ.....!
உயிரான தோழனே அழாதே....!
உன் விரலால் உன் கண்ணீரை துடைத்துக் கொள்..

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (17-Jan-14, 6:43 am)
பார்வை : 307

மேலே