கதை சொல்லி

கதை சொல்லிகளிடம்
போய் சேர்வதே இல்லை
நம்மை பற்றிய
உண்மை கதைகள்
ஒளிந்துக்கொண்டு
தேட வைப்பார்கள்
பூக்களை கசக்கி விட்டு
அவர்களே அழுவார்கள்
யாருக்கும் தெரிந்தே
இருக்கும் வாழந்தே
ஆகா வேண்டிய அவசியத்தை
மேற்கு பார்த்த
வாசல் வைத்த வீடு
சூரிய விடியலை
அறியாததை போலவே...

எழுதியவர் : சுந்தரி விஸ்வநாதன். (17-Jan-14, 7:22 am)
Tanglish : kathai solli
பார்வை : 104

மேலே