இனியொருநாள் நீ வந்தால் எம் ஜி ஆர் பிறந்த தினம் ஜனவரி 17
இனியொரு நாள் நீ வந்தால்
இதயநிறை பக்தி யினால்
மனித குலம் முழுவதுமே
மண்டியிடும் உன் முன்னால்
தனி மனித மானத்தை
தக்க வைத்துக் கொள்வதற்கு
முனிவன் என நீ நின்று
முடிபான வழி சொன்னாய் !
மீண்டும் இங்கு நீவந்தால்
மீண்டு வரும் நல்வாழ்வு !
வேண்டுகின்ற நல்மனை த்தும்
வேகமுறப் பல்கி விடும் .
மூண்டு பெருகி நிற்கும்
மூடப் பழக்க மெலாம்
பூண்டோ தொழிந்து பின்னர்
பூத்து வரும் நல்லுலகு !
இனியொரு நாள் நீ வந்தால்
இன்பம் , அன்பு , வளமை
புனிதம் , பெருமை , பண்பின்
புகலிட மாகும் உலகு .
இனியொரு நாள் நீ வந்தால்
இலக்கியம் பெருகும் உலகில் .
இனியொரு நாள் நீ வந்தால்
இறைமை தங்கும் உலகில் !!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
