தெய்வங்கள்

அரவங்களே ஆபரணங்கள்

அரவங்களை ஆபரணமாய்
அணிந்து காட்சி தரும்
ஆலவாய் அழகனே

ஆயிரம் நாவை உடைய
ஆதிசேஷன் அமைத்த
படுக்கையில் அரி துயில் கொண்ட
சேஷ சாயியே

நாகம் தன்னை
விரலில் நாகாபரணமாக
அணிந்து காட்சி தரும் பார்வதியே

நாகத்தை ஒட்டியாணமாக
தொந்தியில் அணிந்து
இன்புறும் கணபதியே

ஐந்து தலை நாகம் குடை பிடிக்க
ஆனந்தமாக காட்சி
தரும் கருமாரியே

நஞ்சை தலையில் கொண்ட
நாகத்திற்கு அந்த நஞ்சு தீங்கு
செய்யாதிருப்பதைபோல்
ஐம்புலன்களாகிய நாகங்கள்
என்னை தீண்டி
உன்னை மறந்திடச் செய்யாது
காத்திட அருளவேண்டும்

எழுதியவர் : (17-Jan-14, 6:55 pm)
சேர்த்தது : முரளிதரன்
Tanglish : theivangal
பார்வை : 269

மேலே