காதல் செய்கிறேன்..
நேற்று வரை நானும்....
காதலிக்க எண்ணவில்லை...
ஒருமுறைதானும்...
காதல் என்னை
அழைக்கவில்லை....
கண்டவுடன் காதலாம்....
நம்பவில்லை அன்று...
வீழ்ந்த பின்பு நானும்
கிள்ளிப் பார்க்கிறேன்
இன்று...
அரை நொடிதான்
அவள் விழிகளை
அளந்திருந்தேன்...
அடுத்த கணம்
அவள் வலையில்
விழுந்திருந்தேன்...
இனிக்கிறது...
அவள் சிந்திய நாணம்...
என் வாழ்க்கைக்கு....
அவள்தானே இனிய நாதம்....
காத்திருக்கிறேன்
அவள் காதலுக்காய்...
எதிர் பார்த்திருக்கிறேன்....
அவளுடனான வாழ்வுக்காய்....