சமூக எச்சில்
காதலென்று சொல்லி வந்தாய்
வேண்டாமென்று தள்ளி சென்றேன்
மனம் வேண்டி தொடந்து வந்தாய்
மண் பார்த்து நடந்து சென்றேன்
விட்டிருந்தால் வாழ்ந்திருப்பேன்
விரட்டிவந்தாய் விழி நிமர்ந்தேன்
வாழ்வில் புது வசந்தம் தந்தாய்
வான் வரை கூடி சென்றாய்
மல்லிகையில் மயக்கம் தந்தாய்
மனமெல்லாம் மகிழ்ச்சி தந்தாய்
சிந்தனையில் சிலிர்ப்பை தந்தாய்
சிறு பெண் நிலை மாற்றி சென்றாய்
மங்கள நாள் தருவாய் என காக்க வைத்தாய்
அதற்குமுன் என் மடி தேடி வந்தாய்
சூடு பட்டு தெளிந்து நின்றேன்- உன்
சூட்ச்சமங்கள் புரிந்து நின்றேன்
பேசுவதை நிறுத்து கொண்டேன் - உனக்கு
வலி இல்லை உணர்ந்து கொண்டேன்
இன்று அடுத்தவளின் காதலன் நீ
இனி என்றும் சமூக எச்சில் நான்