மதிப்பு

பூக்கின்ற வரையில் தான் பூக்களுக்கு மதிப்பு
பிறக்கின்ற வரையில் தான் பிள்ளைக்கு மதிப்பு,
சுவை உள்ள வரையில் தான் உணவுக்கு மதிப்பு
இலை உள்ள வரையில் தான் மரத்திற்கு மதிப்பு,
அருள்தன்மை உள வரையில் முனிவற்கு மதிப்பு...
கொடைதன்மை உள வரையில் வள்ளலுக்கு மதிப்பு
தேர்வுள்ள வரையில் தான் கல்விக்கு மதிப்பு,
தேர் உள்ள வரையில் தான் கோவிலுக்கு மதிப்பு,
உயிருள்ள வரையில் தான் உடலுக்கு மதிப்பு,
பயிர் உள்ள வரையில் தான் வயலுக்கு மதிப்பு,
அழகுள்ள வரையில் தான் பெண்ணுக்கு மதிப்பு,
பெண்ணுள்ள வரையில் தான் வீட்டுக்கு மதிப்பு,
பல் உள்ள வரையில் தான் பாம்புக்கு மதிப்பு,
பணம் உள்ள வரையில் தான் அப்பனுக்கு மதிப்பு,
புரியாத வரையில் தான் கவிதைக்கு மதிப்பு,
புரிகின்ற வரையில் தான் விடுகதைக்கு மதிப்பு.
கதிர் உள்ள வரையில் தான் பகலுக்கு மதிப்பு,
புதிர் உள்ள வரியில் தான் வாழ்கைக்கு மதிப்பு.
தீ இருக்கும் வரையில் தான் அடுப்புக்கு மதிப்பு,
நீ இருக்கும் வரையில் தான் எனக்கென்றும் மதிப்பு!

எழுதியவர் : முரளிதரன் (18-Jan-14, 12:23 pm)
Tanglish : mathippu
பார்வை : 98

மேலே