உன் கூந்தலே ஒரு நீர்வீழ்ச்சி

அருவியில் அருமருந்து
கலந்து இருக்கிறதென்றால்
பூ வாசம் வீசும்
உன் கூந்தலிலும் தான்
நீர் வீழ்ச்சியின்
அருகில் இருக்கும்
பூக்கள் வாடுவது இல்லை
உன் கூந்தலில்
இருக்கும் பூக்களும் தான்
நீர் வீழ்ச்சியில்
பெரியது
நயாகரா என்றால்
அன்பே உன்
கூந்தலோ
எனக்கு வயாகரா
கார்மேகங்கள்
சூழ்ந்த நீர்வீழ்ச்சி
உன் கூந்தல் தான்
உன் கூந்தலின்
வழி
வழிந்தோடும்
நீருக்கு பெயர் தான்
நீர்வீழ்ச்சியோ
கடவுளும் கூட
வாதம் செய்தது
உன் கார்மேக
கூந்தலுக்கு தான்
பெண்ணின் அழகுக்கு
படைத்த இறைவன்
வைத்த
இயற்கை மணிமகுடம்
அவள் கூந்தல்
நீர்வீழ்ச்சியில்
குளிக்கும்
உணர்வை உணர்கிறேன்
உன் கூந்தல்
என்னை தீண்டும் போது