முடங்கி போனது
ஒற்றை மைக்கொண்டு
கற்றை கற்றையாய்
எழுதிய கடிதங்கள்
ஒவ்வொரு விழாவிற்கும்
ஒய்யாரமாய் வந்து சேரும்
வாழ்த்து அட்டைகள்
கடைசி நாள் பதிவென
பள்ளியில் எழுதி வாங்கிய
காகிதங்கள்
வீட்டை துடைக்கையில்
எடுத்து பார்த்தேன் - தூசியாய்
முடங்கி போனா நியாபகங்கள்