மீதியை வெள்ளித்திரையில் காணலாம்

தேனி கம்பம் திரையரங்கம்
மேக மலைகள் கதாநாயகம்
இளமாலை பொழுது காட்சிநேரம்
அதிஅற்புதம் ஆனந்த அனுபவம் .

மலர்வண்டுகளின் ரீங்காரம் ஒலிசேர்க்கை
குளிர்சந்திரனின் பிரதிபலிப்பு ஒளிசேர்க்கை

சிலிர்அருவியின் நீரோட்டம் சிகையலங்காரம்
தளிர் பூக்களின் சிருங்காரம் உடையலங்காரம்

உயிர்பறவைகளின் உற்சாகம் வசனமாகும்
சுடர்விழிகளின் பார்வையே ரசனையாகும் .

எழுதியவர் : karmugil (18-Jan-14, 5:30 pm)
பார்வை : 73

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே